மெய்ப்பொருள் காண்பது அறிவு

தீப்பரவலுக்குள்ளான mv express pearl கப்பல் தொடர்பில் ஆராய்வதற்காக சுழியோடிகள் குழுவினர் அனுப்பிவைப்பு

- Advertisement -

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான mv express pearl கப்பலின் நிலை குறித்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கை பெறப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கப்பலின் தன்மை குறித்து உரிய முறையில் ஆரயப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும், தற்போதைய நிலையில், எந்தவொரு சுழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உதவிகளை பெறும் வகையில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நகர அபிவிருத்தி அதிகாரபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கப்பல் தொடர்பில் ஆராய்வதற்காக 9 பேர் கொண்ட சுழியோடிகள் குழுவினர் குறித்த பகுதிக்கு பயணித்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

துப்பாக்கி சூட்டு சம்பத்தில் உயிரிழந்தவருக்கும் தனக்கும் எவ்வித பகையும் இல்லை

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு, தன்னுடன் எந்தவிதமான முறுகலும் இருக்கவில்லை எனவும், இது தொடர்பில் தவறான விடயங்கள் பரப்பபட்டுவருவதாகவும், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

Developed by: SEOGlitz