மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றினால் இரண்டு வெளிநாட்டவர்கள் உயிரிழப்பு..!

- Advertisement -

கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் தினைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

கொழும்பு 02 பகுதியில் தங்கியிருந்த 46 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட் நியுமோனியா மற்றும் சுவாச பிரச்சினை என்பனவே குறித்த வெளிநாட்டவர் உயிரிழக்க காரணமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கொழுத்பு கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்க்பட்டிருந்த 63 வயதுடைய ஆணொருவரும் உயிரிழந்துள்ளார்.

சில உடல் உறுப்புக்கள் செயழிலந்தமை மற்றும்  கொவிட் நியுமோனியா என்பனவே குறித்த வெளிநாட்டவர் உயிரிழக்க காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய நாளில் மாத்திரம்  895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 880பேர் சமூகத்தில் மற்றும் சுயதனிமைப்படுத்தலில் இருந்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் நேற்றைய நாளில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 218 பேருக்கு நேற்றைய நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், குருணாகலை மாவட்டத்தில் 150 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 147 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 129 பேரும் றற்றைய நாளில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 585 ஆக காணப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய நாளில் 5 ஆயிரத்து 159 பேருக்கு முன்னெடுக்க்பட்ட PCR  பரிசோதனைகளிலேயே குறித்த 895 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz