மெய்ப்பொருள் காண்பது அறிவு

பௌத்த விஹாரதிபதியிடம் இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு விளக்கமறியல்

- Advertisement -

பௌத்த விஹாரதிபதி ஒருவரிடம் இலஞ்சம் பெறுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்கள், பலப்பிட்டிய நீதவான் சரித ஜயம்பதி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி, அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேநபர்கள், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் பெயரைப் பயன்படுத்தி, கடந்த 17 ஆம் திகதி பலப்பிட்டிய – யோகாஷ்ரம விகாராதிபதியிடம் 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளனர்.

இதனையடுத்து, இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மீண்டும் அணிக்கு வரும் கெய்ல் – இலங்கை தொடர் விபரம் உள்ளே..!

இருபதுக்கு 20 போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிரிஸ் கெய்ல் மற்றும் Fidel Edwards ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் குறித்த இருவரும் இணைக்க்பட்டுள்ளனர். மேற்கிந்திய...

நேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில்  21 மாவட்டங்களில் இருந்து 497 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 151...

ஐ.ம.ச வின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம்...

COVAX தடுப்பூசி திட்டம் – சுகாதார அமைச்சு விடுத்து முக்கிய அறிவிப்பு..!

COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் இலவச கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் கட்டமாக 2 இலட்சத்து 64...

மத்தள சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு..!

மத்தள மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தை மார்ச் மாத இறுதிக்குள்   முழுமையாக திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். நெல்களஞ்சியப்படுத்தப்பட்டமை காரணமாக கடந்த...

Developed by: SEOGlitz