மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடாளுமன்றில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு : சபாநாயகர் மஹிந்த யாப்பா!

- Advertisement -

கொரோனா தொற்றுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் கிருமி  தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதுடன் ரப்பிட் அன்டிஜென் பரிசோதனை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

நாடாளுமன்றத்திற்குள் கொரோனா தொற்று அபாயம் இல்லை என  கூறமுடியாது எனவும் சபாநாயகர்  மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்புப்பட்ட 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சிலர் அடையாளங் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி கயந்த கருணாதிலக்க தலதா அத்துகோரல  எம்.ஏ.சுமந்திரன்   சாணக்கியன் பைசல் காசிம், எம்.எம்.ஹரிஸ், எம்.எஸ்.தௌபீக்  நசீர் அஹமட் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேசரவுடன் தொடர்புடையவர்கள் சிலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும்,...

நுவரெலியா மாவட்டத்தில் 16 பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர்...

இந்தியாவிலிருந்து தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்!

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த கொள்வனவு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியான அனுமதியைப்...

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் தொற்றாளர்கள்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது. பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 330 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு தொற்றுடன்...

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சியினால் கோரிக்கை

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்தநாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தத்துக் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...

Developed by: SEOGlitz