மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு தயாராகும் வட மாகாண அரச சாரதிகள் சங்கம்!

- Advertisement -

சுகாதர சேவைகள் சாரதிகளின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களது இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தி எதிர்வரும் 12 ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண அரச சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள், தம்மை சுகாதாரத் துறை தவிர்ந்த வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் மாகாணம் தழுவிய சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

- Advertisement -

இந்த நிலையிலேயே, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் நேற்று (09.10.2020) வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் கோரிக்கை முன்வைத்து மகஜர் ஒன்றை கையளித்து தமது போராட்ட முடிவையும் அறிவித்துள்ளனர்.

ஆளுநருக்கு கையளித்த மகஜரில்

” இது தொடர்பில் 21.01.2020 அன்று கடிதம் மூலம் ஜனாதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு முகவரியிட்டு எமது சங்கத்துக்கு பிரதியுடன் பதில்க் கடிதம் அனுப்பப்பட்டது.

அதன்படி 09.09.2020 அன்று தங்களுடனான எமது சங்கப் பிரதிநிதிகளின் சந்திப்பில் குறித்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தங்களின் அனுமதியோடு, இடைநிறுத்தப்பட்டிருந்த வருடாந்த இடமாற்றம் 16.09.2020 நடைமுறைக்கு வந்திருந்தது.

ஆனால் இடமாற்றம் வழங்கப்பட்ட 35 சுகாதார திணைக்கள சாரதிகளில் 25 சாரதிகள் இடமாற்ற கட்டளையை பின்பற்றாமல், தங்களை வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்வதை நிறுத்துமாறும் தங்களது இணைந்த சாரதி சேவையை மூடிய (Clossed) சுகாதார சேவையாக்குமாறு கோரிக்கை முன்வைத்து சுகயீன விடுமுறைப் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகயீன விடுப்பு போராட்டத்தை செய்யவுள்ளோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து வடமாகாண அரச சாரதிகள் சங்கச் செயலாளர் எஸ்.சுதர்சனிடம் கேட்டபோது “கடந்தகாலங்களில் சுகாதார திணைக்கள சாரதிகள் தம்மை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று அமைச்சர்களை நாடி இடமாற்றங்களை தவிர்த்து வந்தனர்.

இப்போது இடமாற்றம் பெறாமல் கூடிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக தமது சாரதி சேவையை மூடிய சுகாதார சேவையாக்குமாறு கோருகின்றனர். வடமாகாணத்தில் நோயாளர் காவு வண்டிகளை ஓடக்கூடியவர்கள் தாங்களே என்று தெரிவித்து இடமாற்றத்தை தவிர்க்க முயற்சி செய்கின்றனர்.

எனவே இந்த செயற்பாடுகளை கண்டித்து, இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு சுகயீன விடுப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தெரிவுக் குழுவிற்கு 07 உறுப்பினர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு இளைஞர் விவகார மற்றும்...

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்துவது குறித்து சிங்கப்பூர் நீதி அமைச்சிற்கு விளக்கம்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபர், சிங்கப்பூர் நீதி அமைச்சின் செயலாளருக்கு  தெளிவுபடுத்தியுள்ளார். சட்ட மா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கைதிகள் உள்ளிட்ட 56 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடகங்களுக்கு...

Developed by: SEOGlitz