மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை உணவகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை!

- Advertisement -

சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைய, பாடசாலை உணவகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸினால் இதற்கான ஆலோசனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அத்துடன், பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் செயற்றிட்டத்தை மீள ஆரம்பிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இது குறித்து பாடசாலைகளுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குமாறு, உரிய தரப்பினருக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இந்த நிலையில்,  பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் செயற்றிட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி  மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், சமூக இடைவெளியைப் பேணி, பாடசாலை உணவகங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறும் கல்வி அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறுகிய இடைவேளையில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பாடசாலை உணவகங்களுக்கு வருவதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, காலை வேளையில் வகுப்பு மட்டத்தில் மாணவர்களின் உணவு தேவைகளை கேட்டறிந்து அவற்றை, விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்குறித்த திட்டம் அல்லது வேறு பொருத்தமான திட்டத்தின் அடிப்படையில் மாத்திரமே 14ஆம் திகதி முதல் பாடசாலை உணவகங்கள் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

LPL கிரிக்கெட் திருவிழா – Jaffna Stallions அணி அபார வெற்றி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

கொரோனா உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை மை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மேலும் 221 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

கொரோனாவுக்கான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்  செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்...

நோர்வூட் பிரதேசத்தில் தீப்பரவல் : 12 குடியிருப்புகள் பாதிப்பு!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவ்வெளி தொழிற்சாலைப் பிரிவில் உள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் 12 குடியிருப்புகள் எரிந்து போயுள்ளன. இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 இற்கு  இடம்பெற்றதாக எமது பிராந்திய...

Developed by: SEOGlitz