மெய்ப்பொருள் காண்பது அறிவு

தற்போதைய அரசாங்கம் மீது காணப்பட்ட மக்களின் நம்பிக்கை சீர் குலைந்துள்ளது- விஜயபால

- Advertisement -

தற்போதைய அரசாங்கம் மீது காணப்பட்ட மக்களின் நம்பிக்கை சீர் குலைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

“இந்த நாடு மிகவும் பாதுகாப்பான நிலைமைக்கு வரும்  என  கோட்டாபய ராஜபக்ஸ இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரும் போது மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அந்த எதிர்பார்ப்பு இல்லாது போயுள்ளது. நீதியானதும், நியாயமானதுமான முறையில் அண்மையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை துரத்தி துரத்தி அடித்தார்கள். அந்த அடக்குமுறையை நாட்டு மக்கள் பார்த்தார்கள். முச்சக்கர வண்டிசாரதிகளின் உரிமைகளுக்காக செயற்பட்ட சுனில் ஜயவர்தனவை பட்டப்பகலில் தாக்குதலுக்கு உட்படுத்தினார்கள். இவை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மிரிஹான பொலிஸுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்ட போதிலும், அவையனைத்தையும் புறந்தள்ளிவிட்டு நாட்டு மக்களுக்கு காட்டுவதற்காக கோட்டாபய ராஜபக்ஸ செயற்படுகின்றார்.அல்லது இதன் கீழ் வேறு ஏதேனும் தந்திரம் உள்ளதா?”

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 318 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 980 ஆக அதிகரித்துள்ளமை...

மஹர சிறைச்சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க ஒரு குழு நியமனம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சின் செயலாளர் எம். எம். பி. கே மாயாதுன்னே இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

காணொளி காட்சி மூலம் அமைச்சரவை சந்திப்பு – வரலாற்று நிகழ்வு என ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் அமைச்சரவை சந்திப்பு காணொளி காட்சி மூலமாக...

தம்புள்ளை அணியை திணரடித்த Jaffna Stallions – தொடர் வெற்றி!

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் 5ஆவது போட்டியில் Jaffna Stallions அணி 66 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Dambulla Viiking ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியில்...

Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை!

எத்தியோப்பியாவின் Tigray பிராந்தியத்தின் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ள இராணுவப் படையினரை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Tigray பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள TPLF கிளர்ச்சியாளர்களின் தலைவர் Debretsion Gebremichael இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அத்துடன், Tigray...

Developed by: SEOGlitz