மெய்ப்பொருள் காண்பது அறிவு

George Floyd கொலைக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான George Floyd பொலிஸாரினால் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இனவெறிக்கு எதிராகவும் அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்ப்டுள்ளன.

அவுஸ்திரேலியாவின் Perth மற்றும் Darwin நகரங்களிலேயே இவ்வாறு பாரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

- Advertisement -

கடந்த வாரம் அவுஸ்திரேலியாவின் சிட்னி, பிரிஸ்பன், மற்றும் மெல்பேர்னில் குறித்த இனவெறிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, பொதுமக்களை போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கோரிக்கை விடுத்துள்ளார்,

இதேவேளை, கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை அவுஸ்திரேலிய பிரஜைகள் ஏனைய நாடுகளுக்கு பயணிப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz