கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஸ்பெய்னில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க செயற்பாடுகளை மீறி செயற்பட்டமை காரணமாக பெல்ஜியம் நாட்டின் இளவரசருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெல்ஜியம் இளவரசர் Joachim 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை பின்பற்றதவறியதன் காரணமாக ஸ்பெயின் அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
28 வயதான பெல்ஜியம் இளவரசர் Joachim மே மாதம் 24 ஆம் திகதி ஸ்பெய்ன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தமது நாட்டிற்குள் பிரவேசித்துள்ள பெல்ஜியம் இளவரசர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றதாக ஸ்பெய்ன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்திற்கு பெல்ஜியம் இளவரசர் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.