மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதில்லை : பொதுஜன பெரமுன!

- Advertisement -

எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயம் செய்யப்பட்டமையானது நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றியாகுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் திகதி தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. இதன்படி நாம் தேர்தலுக்குத் தயாராகவே இருக்கின்றோம். அண்மைக்காலமாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் சிலரின் கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதனால் மக்கள் மத்தியில் தேர்தல் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை தொடர்பாக மக்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. எமது புதிய அரசாங்கத்தில் இவ்விடயங்கள் ஆராயப்படும்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியுடன் பொதுஜன பெரமுன இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக வெளியாகும் கருத்துக்களில் எந்த உண்மையும் இல்லை. மக்களால் புறக்கணிக்கப்பட்ட தோற்ற ஒரு கட்சியுடன் ஒருபோதுமே பொதுஜன பெரமுன இணைந்து ஆட்சி அமைக்காது” என அவர் முலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சடுதியாக அதிகரித்து கொரோனா தொற்று உயிரிழப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்…

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 137 ஆக உயர்வடைந்துள்ளது.

Decathlon கொழும்பின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட்கள் காட்சியறையை தற்போது யூனியன் பிளேஸில் திறந்து வைத்துள்ளது

விளையாட்டு பொருட்களின் சில்லறை விற்பனையாளராக வாடிக்கையாளர் மத்தியில் நட்பெயர் பெற்ற DECATHLON நிறுவனமானது தமது மற்றுமொரு புதிய கிளையை கொழும்பில் ஸ்தாபித்துள்ளது. யுனியன் பிஸஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள DECATHLON நிறுவனத்தின் இரண்டாவது கிளையானது உடற்பயிற்ச்சி...

ரிஸாட் பதியுதீன் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டித்த S.M.M. முஷர்ரப்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் தொடர்பில் எந்த குற்றங்களும் நிரூபிக்கப்படாத நிலையில், அவர் குறித்து தவறான கருத்துக்களை முன்வைப்பதை கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் S.M.M. முஷர்ரப் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை,...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் – சரத் வீரசேகர!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசாங்கத்தினால் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததும் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். தற்போதையநிலையில் பயங்கரவதா தடுப்பு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவின் விசேட கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காண்பதோடு, உரிய தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எந்தவித பாரபட்சமும் இன்றி...

Developed by: SEOGlitz