மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெற்றிகரமாக ஒத்திகை தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு.

- Advertisement -

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டு ஒத்திகை தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது என்பதை ஆராய்வதற்காக குறித்த தேர்தல் ஒத்திகை இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

யாழ்ப்பாணம், நாவாந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இன்று காலை 10 மணிக்கு தேர்தல் ஒத்திகை ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஒத்திகை தேர்தலில் அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டின் ஏனைய சில மாவட்டங்களிலும் இன்றைய தினம் தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 7 ஆம் திகதி அம்பலாங்கொடை பகுதியில் முதலாவது தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, சில மாவட்டங்களில் நேற்றைய தினம் இரண்டாவது தேர்தல் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல் துறை நடாத்தும் உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை நடாத்தும் “இளையோர், உண்மைகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை” எனும் கருப்பொருளிலாலான உரையரங்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு இணையவழியூடாக இடம்பெறவுள்ளது. இவ் உரையாடலானது தொடர்ச்சியாக பல...

தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தெரனியகலை பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தெரனியகலை கும்புருகம பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குடிநீர்திட்டத்தில் இடம்பெற்ற மோசடிவிவகாரம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த...

தென்னிந்திய நடிகர் விவேக் காலமானார்

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதென்னிந்திய நடிகர் விவேக் காலமானார் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில்...

சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள துறைமுகநகரம் – சூடுபிடிக்கும் அரசியல் களம்..!

நாட்டுக்கு பொருத்தமற்ற விடயங்கள் குறித்து பேசுவதை ஜனாதிபதி தவறாக எடுத்துக்கொள்வாராக இருந்தால், எவ்வாறு நாட்டை சரியான இடத்துக்குக் கொண்டுவர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பு துறைமுகநகர பொருளாதார...

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் இன்றைய அமர்வின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது, இந்திய மீனவர்களின்...

Developed by: SEOGlitz