மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரபாகரனின் கனவுகளை மெய்ப்பிக்க வடக்கில் அரசியல்வாதிகள் முயற்சி.

- Advertisement -

உயிரிழந்த பிரபாகரனின்  கனவுகளை மெய்ப்பிக்க வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் முயல்வதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் உப தலைவர் மது மாதவ அரவிந்த தெரிவித்துள்ளார்,

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்,

- Advertisement -

ஆயிரக்கணக்கில் மக்களை கொன்றொழித்த தமிழீழ விடுதலைப்புலிகள் தவறிழைத்தவர்கள் அல்ல என சிவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் அது ஒரு போராட்டம் என அவர் கூறியுள்ளார்,வட்டுக்கோட்டை உடன்படிக்கைக்கு அமைய போராட்டத்தை பிரபாகரன் ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்,இது ஒரு கீழ்த்தரமான கருத்து,தற்போது நாடே கொரோனா குறித்த பார்வையிலிருக்கும் போது இனவாதிகள் தற்போது இனவாதத்தை தமிழர்களின் மத்தியில் பரப்ப ஆரம்பித்துள்ளனர்,உயிரிழந்த பிரபாகரனின் கனவுகளை உயிர்ப்பிக்க முயலும் அரசியல்வாதிகள் வடக்கிலும் தெற்கிலும் உள்ளனர்,அத்துடன் முஸ்லிம் இனவாதியான சஹ்ரானின் கனவுகளைஉயிர்ப்பிக்க முயலும் அரசியல்வாதிகளும் உள்ளனனர்.இதனால் வட்டுக் கோட்டை உடன்படிக்கைக்கு அமைய பிரபாகரன் விக்னேஸ்வரனுக்கு தம்பியானது போல் ஒலுவில் உடன்படிக்கைக்கு அமைய ஸஹ்ரானும் தம்பியாகலாம்,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது!

ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4.00 மணிவரையான ஆறு மணித்தியால காலப்பகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய,...

பிரித்தானியாவில் ஜூன் 15 முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம்

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதி முதல் அத்தியாவசிய வணிக நிறுவனங்களை திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளார். இதேவேளை ஜூன் 8-ம் திகதி...

நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாடு முழுவதும் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நான்கு மாவட்டங்களுக்கு மாத்திரம்  ஊடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது மேலும் மூன்று...

அமரர் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் குறித்த முழு விபரம்!

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொட்டகலையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவரது உடல் குடும்ப உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு மலர்ச்சாலையில் இருந்து அவரது...