மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6219 குடும்பங்கள் பாதிப்பு

- Advertisement -

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 6 ஆயிரத்து 219 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள விடுத்துள்ள  அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

- Advertisement -

மேலும், அனர்த்தங்களினால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 117 குடும்பங்களை சேர்ந்த 248 பேர், தெரிவுசெய்யப்பட்ட 29 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 29 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 729 வீடுகள் பகுதி அளவிலும்  சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 5 குடும்பங்களை சேர்ந்த 18ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 152 குடும்பங்களை சேர்ந்த 657 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 285 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 127 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் 220 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விசாரிக்க வேண்டும் : தேசிய சுதந்திர முன்னணி!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம்...

கொரோனா தொற்றின் இன்றைய நிலைவரம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஆனைவிழுந்தான் பதற்றநிலை தணிந்தது : கைது செய்யப்பட்டவர்கள் விடுவிப்பு!

கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் காணி விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்ற நிலை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில்  நீண்டகாலமாக  நெற்செய்கை...

இங்கிலாந்து போட்டி தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி!

இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதத்தில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்புடன் நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடுவதற்கே மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு அனுமதி...

இந்தியாவிற்காக ஜி 7 மாநாட்டை ஒத்திவைத்தார் டிரம்ப்!

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். மேலும், அவுஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த...