மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெசில் ராஜபக்ஸவின் வருகையின் ஊடாக, எரிபொருள் விலை குறைப்பை எதிர்பார்க்க முடியாது – பொதுஜன பெரமுன

- Advertisement -

பெசில் ராஜபக்ஸவின் வருகையின் ஊடாக, எரிபொருள் விலை குறைப்பை மாத்திரம் எதிர்பார்க்க முடியாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்

- Advertisement -

“பெற்றோல் விலை குறைவடைகின்றமையை மாத்திரம் பெசில் ராஜபக்ஸவிடம் எதிர்பார்க்க முடியாது. நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் காணப்படுகின்ற பல்வேறு தீர்மானங்கள் குறித்து முடிவெடுக்கும் இயலுமை அவருக்கு உள்ளது. பெற்றோல் குறைவடைகின்றமையின் ஊடாக மாத்திரம் பொருளாதார ரீதியில் பெறுபேறோன்றை எதிர்பார்க்க முடியும். அவர் பதவியேற்றதன் பின்னர், 24 மணித்தியாலங்களில் 18 மணித்தியாலம் பணியில் ஈடுபட்டு வருகின்றார். அவ்வாறு வேலை செய்வதற்கான அறிவு, இயலுமை என்பன அவருக்கு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக அரச கட்டமைப்பு சற்று நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தது. இதனை மீட்டெடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் ஜனாதிபதிக்கு பொருளாதார ரீதியில் ஒரு பலமாக பெசில் ராஜபக்ஸ வருகை தந்துள்ளார். இதன்படி எதிர்காலத்தில் அவர் தனது வேலைகளை காண்பிப்பார்.”

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz