மெய்ப்பொருள் காண்பது அறிவு

நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி புதிய விசாரணை பிரிவு -விரைவில் நடவடிக்கை

- Advertisement -

நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி புதிய விசாரணை பிரிவொன்றை விரைவில் அமைக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கப்பம் பெறுதல், போதை பொருள் வர்த்தகம், ஆகிய குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக கொண்டு குறித்த பிரிவு அமைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமின்றி, நாடளாவிய ரீதியில் அச்சுறுத்தல் வாயிலாக கப்பம் பெறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை முறையிடப்படாத இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள், தென்மாகாணத்தை இலக்காக கொண்டு இடம்பெறுகின்ற பாரிய போதை பொருள் வர்த்தகங்கள், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு திட்டமிட்ட வகையில் இழைக்கப்படுகின்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் துரோகங்கள் ஆகியனவற்றினை கண்டறிதல் மற்றும் தடுப்பதற்காக இந்த பிரிவு விசேடமாக இயங்கும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த விசேட பிரிவினை செய்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பிரிவிற்கு பொதுமக்கள் தகவல்களை வழங்கும் வகையில் விசேட தொலைப்பேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டயகம சிறுமியின் சடலத்தை பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு

நாடாளுமன்ற  உறுப்பினர் ரிஷாட்  பதியூதீன் வீட்டுப்பணிப் பெண்ணாக கடமைபுரிந்த நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக பேராதெனிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு − புதுகடை...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள் – இன்று மாத்திரம் ஆயிரத்து 850 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 850 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3...

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் -சுனாமி எச்சரிக்கை…!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் 8 தசம் 2 ரிச்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடற் பிராந்தியத்தில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு...

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

Developed by: SEOGlitz