மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாட்டிற்கு GSP பிளஸ் வரிச்சலுகை தடைப்படும் அபாயம் இல்லை – தினேஸ் குணவர்தன உறுதி.

- Advertisement -

நாட்டிற்கு GSP பிளஸ் வரிச்சலுகை இல்லாது போகும் அபாயம் உள்ளதாக கூறப்படும் விடயமானது உண்மைக்கு புறம்பானது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

ஐரோப்பிய ஒன்றியத்துடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாகவும், GSP பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் தீர்மானம் உன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், GSP பிளஸ் வரிச்சலுகை நாட்டிற்கு தொடர்ச்சியாக கிடைக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்துடன் அரசாங்கம் மேற்கொண்ட கலந்துரையாடலில், முன்வைக்க்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கத்தினால் யோசனைகள் முன்வைக்கபட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக நீதி அமைச்சர் அலி ப்ரி அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, புதிய அரசியலமைப்பு விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் மீள்திருத்தம் செய்தல், உள்ளிட்ட விடயங்களே அரசாங்கத்தினால் முன்னெடுக்க்பட்டுள்ள மாற்று விடயங்களாகுமெனவும் அவர் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ரிஷாட் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண் துஷ்பிரயோகம்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பணிப் பெண்ணை ரிஷாட் பதியுதீனின் மனைவியினது சகோதரர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வீட்டில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைக்கு

இன்று முதல் அரச நிறுவனங்கள் வழமையான நடைமுறையின் கீழ் இயங்கவுள்ளது. சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களையும் வழமையான  நடைமுறைகளுக்கு அமைய சேவைக்கு உள்வாங்குதல் தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி, கொரோன வைரஸ் பரவலை...

அமெரிக்காவிடம் இருந்து ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து ஒரு லட்சத்து நான்காயிரம் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி...

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை ஆரம்பம்

இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட விமான சேவை இன்று முதல்  மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Moscow நகரில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL-534 எனும்...

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை – விஹாரமகாதேவி பூங்காவில் 24 மணிநேர சேவை முன்னெடுப்பு

AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை 8.30 இக்கு கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி,  AstraZeneca இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை குறித்த மத்திய நிலையத்தில்  24 மணி நேரம்  ...

Developed by: SEOGlitz