மெய்ப்பொருள் காண்பது அறிவு

கறுப்பு சீனி வாரம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் – ராஜித வலியுறுத்தல்!

- Advertisement -

சீனி இறக்குமதியில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கறுப்பு சீனி வாரம் ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

சீனியை இறக்குமதி செய்வதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் 25 சதவீதம் வரி குறைக்கப்பட்டதன் காரணமாக, ஆயிரத்து 590 கோடி ரூபா வருமானம் இழக்கப்பட்டதாக, நிதி தொடர்பான நாடாளுமன்ற  மேற்பார்வைக் குழுவுக்கு நிதி அமைச்சினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன  இவ்வாறு தெரிவித்தார்.

அரிசிக்கான டட்லி சிரிசேனவின் விலையைக் கூடக் கட்டுப்படுத்த முடியாத இந்த அரசாங்கம் இன்று சீனி இறக்குமதி வரிக் குறைப்பால் 1590 கோடி நிதியை சூறையாடியிள்ளது.2007-2014 காலப்பகுதியில் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்டோர் 1200 கோடி பினை முறியில் சூறையாடினர். 2015-2019 காலப்பகுதியில் இடம் பெற்ற பினை முறி மோசடி 1200 கோடியாகும். இந்த நிதி வங்கியில் சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட்டுள்ளது.ஆனால் இவர்கள் சீனியில் மாத்திரம் 1590 கோடி சூறையாடியுள்ளனர். இந்த நிதிகளை மீளப் பெற வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் சட்ட ரீதியாக மேற்கொள்வோம். சூறையாடிய நிதியைப் பெற வேண்டும். இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டும்.சீனி இறக்குமதி வரிக் குறைப்பின் மூலம் நுகர்வோருக்கு ஒரு சதமேனும் இலாபம் கிடைக்கவில்லை. அரசாங்கத்திற்கும் இதன் இலாபங்கள் கிடைக்கவில்லை,அவ்வாறு எனின் இத்தகைய பாரிய நிதி எங்கே சென்றது.நண்பர்கள் கூட்டம் இதை சூறையாடியுள்ளது. “கறுப்பு சீனி வாரம்” ஒன்றை பிரகடனப்படுத்த வேண்டும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

வளிமண்டலவியல் திணைக்களத்தின் புதிய அறிக்கை

அரபுக்கடலின் தென்கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது சூறாவளியான மாற்றமடைந்துள்ளது. மேலும், தாக்டே எனப்படும் இந்த சூறாவளியானது அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடந்து நாட்டின் வடக்கில் இருந்து வடமேல் திசையில் பயணிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும்...

இன்றும் அதிக அளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் -விபரம் உள்ளே….!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 786 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த...

ஒரு இலட்சத்துக்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...

கொரோனா தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை -சுகாதார அமைச்சின் தீர்மானம் இதோ…!

நோய் அறிகுறிகள் அற்ற நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்களுக்கு அவர்களது வீடுகளிலேயே தங்கவைத்து சிகிச்சையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி...

கொரோனா தொற்று பரவலுக்கு யார் காரணம் -சுகாதார தரப்பு வெளிப்படுத்திய உண்மை!

அரசாங்கமும் சுகாதார துறையினரும் 90 வீதமான பணிகளைச் செய்திருந்தாலும், பொதுமக்களின் நடத்தையே கொரோனா வைரஸ் பரவக் காரணமாக அமைந்துள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தற்போது நாட்டில் காணப்படும் நிலைமைக்கு அமைய, தொழிலுக்கு...

Developed by: SEOGlitz