மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை அரசாங்கம் அதானி நிறுவனத்துடன் நேரடியாக கலந்துரையாடல்: கம்மன்பில!

- Advertisement -

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில், இலங்கை அரசாங்கம் அதானி நிறுவனத்துடன் நேரடியாக கலந்துரையாடியதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

- Advertisement -

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் அதானி நிறுவனத்தை முன்மொழிந்தது.இதன் பின்னர் துறைமுக அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் மாத்திரம்அதனை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் கொள்கையளவில் தீர்மானித்தது.அத்துடன் மேற்கு முனையத்தை இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய அரசாங்கத்தினால் இதற்காக பெயரிடப்பட்ட நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டது.இந்த நிலையில் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டது.இந்த நிலையில் இவ்வாறான ஒன்றிணைந்த தீர்மானங்களுக்கு, தாம் உத்தியோகபூர்வமாக தலையிடுவதில்லை என இந்திய அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது.இதனால் மேற்கு முனையம் தொடர்பில் அதானி நிறுவனத்துடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, அரசாங்கத்தில் உள்ள சில தரப்பினர் அதானி நிறுவனத்துடன் கொண்டுள்ள தனிப்பட்ட உறவை பலப்படுத்த, மேற்கு முனையத்தை தாரைவார்க்க முயற்சிப்பதாக  இலங்கை துறைமுக ஊழியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.

அத்துடன், மேற்கு முனைய விவகாரத்தில் அதானி நிறுவனம் இந்திய அரசாங்கத்தை தவிர்த்து, நேரடியாக இலங்கையுடன் தொடர்பு கொள்வது அதிருப்தியளிக்கும் செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை துறைமுக அதிகார சபை முழுமையாக தனிப்பட்ட ரீதியில் அபிவிருத்தி செய்ய முடியுமாயின், மேற்கு முனையத்தையும் ஏன் அபிவிருத்தி செய்ய முடியாது என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துடன்,  கிழக்கு முனைய விவகாரத்தில் தேசப்பற்றுடன் செயற்பட்டு, மேற்கு முனைய விவகாரத்தில் தேசத் துரோகிகளாக செயற்பட முடியாது எனவும் இலங்கை துறைமுக ஊழியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன மேலும் தெரிவித்திருந்தார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தல்…!

நாட்டில் 10 மாவட்டங்களுக்கு உட்பட்ட 70 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட...

காசா மீது 7 ஆவது நாளாகவும் தாக்குதல்

முற்றுகையிடப்பட்டுள்ள காஸா பிராந்தியத்தின் மீது இஸ்ரேலிய இராணுவத்தினர் ஏழாவது நாளாக இன்றும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக 13 சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேர் இன்றைய நாளில் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்...

நினைவுத்தூபி தொடர்பிலான இராணுவத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்ட விடயத்தில் தொடர்பு இல்லை என ராணுவம் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

போக்குவரத்து தொடர்பில் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்

பயணத்தடை தளரத்தப்படுகின்ற போதிலும்  எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கண்காணிப்பு நடவடிக்கை  தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை  ...

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான நிலைப்பாடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற...

Developed by: SEOGlitz