மெய்ப்பொருள் காண்பது அறிவு

அந்நிய செலாவணி தொடர்பில் பிரதமரின் விசேட அறிவுறுத்தல்..!

- Advertisement -

அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில், வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் அந்நிய செலாவணி ஊடாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில், வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகளுடன், நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

இதன்படி, வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களில், அதனை திருப்பிச் செலுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இதற்குத் தேவையான திட்டங்களை மேற்கொண்டு, அதன் ஊடாக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அத்துடன், கடல்வள பல்கலைக்கழகத்திற்கான திட்டம் குறித்தும் இதன்போது கவனஞ் செலுத்தப்பட்டதாக, பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதன்படி, பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளின் அபிவிருத்திகளை இலக்காக கொண்டு, கடல்வள பல்கலைக் கழகத்திற்கான திட்டம் குறித்து கவனஞ் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பயணக்கட்டுப்பாடு குறித்து இராணுவத் தளபதி சற்றுமுன்னர் விடுத்த அறிவிப்பு

இன்று நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி நள்ளிரவு வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள்...

மூன்று மாத குழந்தையையும் ஆட்கொண்டது கொரோனா

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் மேலும் 26 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் வத்தேகம பகுதியைச் சேர்ந்த மூன்று மாத குழந்தையொன்றும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தம் – முழுமையான தகவல் உள்ளே

பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,இலங்கை போக்குவரத்து...

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாத்தறை மாவட்டத்திற்கு உட்பட்ட உயன்வத்த மற்றும் உயன்வத்த வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் உடன்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு – சற்று முன்னர் வெளியான செய்தி

அனைத்து மாகாணங்களுக்குமிடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாகாணங்களுக்குமடையில் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல், மக்கள்...

Developed by: SEOGlitz