மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு டேம் வீதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான தகவல்..!

- Advertisement -

கொழும்பு டேம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம், குறுவிட்ட தெப்பனாவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மரபணு பரிசோதனை மூலம் இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்ட போதும், தலை துண்டிக்கப்பட்டிருந்தமை காரணமாக மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த பெண்ணின் தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் மேலதிக பகுப்பாய்வாளர் D.H.L.W. ஜயமான்னவினால் வெளியிடப்பட்டுள்ள பரிசோதனை முடிவுகளுக்கமைய, குறித்த பெண்ணின் மரபணு மாதிரி அவரது  தாய் மற்றும் சகோதரனின் மரபணு மாதிரிகளுடன் ஒத்துபோகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், துண்டிக்கப்பட்ட குறித்த பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சடலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் விரைவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம்  கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில்,  பயணப்பை ஒன்றிலிருந்து கடந்த முதலாம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்,  கடந்த 2ஆம் திகதி மொனராகலை படல்கும்புற பகுதியில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz