கேகாலை டிப்போ ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, கேகாலை டிப்போ அலுவலக ஊழியர்கள் 60 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, தொற்றாளர்களை உதுகொட கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த தொற்றாளர்களின் குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 336 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 787 ஆக அதிகரித்துள்ளது