மெய்ப்பொருள் காண்பது அறிவு

சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் கணவர் விஜயகுமாரதுங்கவின் 33 ஆவது நினைவு தினம் இன்று!

- Advertisement -

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவர் விஜயகுமாரதுங்கவின் 33 ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில்  கொழும்பு புதிய நகரசபை மண்டத்தில் இன்றுபிற்பகல் குறித்த நிகழ்வு  இடம்பெற்றுள்ளதாக பிரமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை இலங்கை கொமியூனிஸ்ட்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.குணசேகர, விஜய குமாரதுங்கவின் 33ஆவது நினைவு தின உரை நிகழ்த்தியுள்ளார்.

அணிசேரா வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய ஒற்றுமை ஆகிய விடயங்களில் விஜய குமாரதுங்க உறுதியாக செயற்பட்டவர் என இலங்கை கொமியூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டிவ்.குணசேகர  இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் ஜனநாயக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர்திஸ்ஸ விதாரன, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே, இலங்கை மக்கள் கட்சியின் செயலாளர் அசங்க நவரத்ன உள்ளிட்ட அரசியல்தலைவர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மீண்டும் அணிக்கு வரும் கெய்ல் – இலங்கை தொடர் விபரம் உள்ளே..!

இருபதுக்கு 20 போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் கிரிஸ் கெய்ல் மற்றும் Fidel Edwards ஆகியோர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடும் மேற்கிந்திய தீவுகள் அணியில் குறித்த இருவரும் இணைக்க்பட்டுள்ளனர். மேற்கிந்திய...

நேற்றைய நாளில் அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பிலேயே அடையாளம்!

நாடளாவிய ரீதியில் நேற்றைய நாளில்  21 மாவட்டங்களில் இருந்து 497 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய நாளில் 151...

ஐ.ம.ச வின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி  இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில் இந்த தீர்மானம்...

COVAX தடுப்பூசி திட்டம் – சுகாதார அமைச்சு விடுத்து முக்கிய அறிவிப்பு..!

COVAX தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் இலவச கொரோனா தடுப்பூசியின் முதலாவது தொகுதி நாளை நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, முதல் கட்டமாக 2 இலட்சத்து 64...

மத்தள சர்வதேச விமான நிலையம் திறக்கப்படும் திகதி அறிவிப்பு..!

மத்தள மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தை மார்ச் மாத இறுதிக்குள்   முழுமையாக திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவித்துள்ளார். நெல்களஞ்சியப்படுத்தப்பட்டமை காரணமாக கடந்த...

Developed by: SEOGlitz