மலையகத்திற்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டதன் காரணமாக குறித்த ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் இன்று (21) மதியம் 1.40 அளவில் இங்குருஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளங்களை விட்டு விலகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரயில் பாதையை சீர்செய்யும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.