ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் சென்ற லொறி விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த விபத்து ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய பகுதிக்குச்சென்று கொண்டிருந்து லொறி வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறி வீதியை விட்டு வலகியதன் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
லொறியின் சாரதிக்கும் நடத்துனருக்கும் எவ்வித காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும், லொறி வண்டிக்கு பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளதாக நானுஒயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.