மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொத்துவில் – பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

- Advertisement -

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் கலந்து கொண்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் 3 முதல் அறிக்கைகள் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

- Advertisement -

பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் தனித்தனியே குறித்த முதல் அறிக்கைகளை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக இவ்வாறு நீதிமன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணிக்கு தடைகோரி ஏற்கனவே பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றம் வழங்கிய தடையுத்தரவை மீறி செயற்பட்டதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வழக்குகளை மார்ச் 29 மற்றும் மே 19, 20 ஆகிய திகதிகளுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz