மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் மீறல் – கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேர் கைது!

- Advertisement -

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

பாதுகாப்பு முகக் கவசம்  அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை  கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்  பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான  காலப்பகுதியில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில்  3 ஆயிரத்து 56  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  கொரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை தொடர்ந்தும் கடைபிடிக்குமாறும் பிரதிப்  பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை,  மேல் மாகாணத்தில்  சுகாதார  விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 38 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திற்குட்பட்ட அரச மற்றும்  தனியார் நிறுவனங்களில்  நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதிப்  பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மேல் மாகாணத்திற்குட்பட்ட 447 அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல்  இதுவரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்தில்  உள்ள 12 ஆயிரத்து 12 அரச மற்றும் தனியார்  நிறுவனங்களில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், சோதனைக்குட்படுத்தப்பட்ட 10 ஆயிரத்து 621  நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டுதல்கள் உரிய முறையில் பின்பற்றபடுவதுடன்,  ஆயிரத்து 389 நிறுவனங்களில்  சுகாதார விதி முறைகளை  தவிர்த்து செயற்படுவதாகவும்  பிரதிப்  பொலிஸ் மா அதிபர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஆயிரத்து 300 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்   பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்து சமுத்துரத்தை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் – விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

இந்து சமூத்திரத்தில் தென்பிராந்தியத்திற்கு அன்மித்த பகுதியில் ஏற்பட்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மொரிஸியஸ் பகுதியில் 6.6 சிக்டர் அளவில் இன்று மாலை 7.35 க்கு இந்த...

நோன்புப் பெருநாள் குறித்து சற்று முன் வெளியான அறிவிப்பு….!

புனித ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத நிலையில் நாளை மறுதினம் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. ஷவ்வால் மாத தலைப் பிறையை...

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில்..!

நாடளாவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இந்த பயணத்தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண...

கடத்தப்பட்ட வர்த்தகர் உயிருடன் மீட்பு

பண்டாரவளை நகரில் கடந்த்தப்பட்ட வர்த்தகர் அமுனுதோவ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.. இவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மரக்கறி வர்த்தகரிடமிருந்து 37 ஆயிரம் ரூபா பணமும் 90 ஆயிரம்...

பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை

நிலவுகின்ற கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு பிலியந்தலை வழியாக பயணிக்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலியந்தலை காவல் துறை அதிகாரத்திற்குட்பட்ட 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, தம்பே, படகெந்தர வடக்கு, கெஸ்பேவ வடக்கு,...

Developed by: SEOGlitz