மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று முதல் அனுமதி!

- Advertisement -

சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக சிறைச்சாலைகளில்  கைதிகளை பார்வையிடும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டடருந்து.

- Advertisement -

இந்த நிலையில்  கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படாத நிலையிலேயே குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்திற்கு ஒருமுறை மாத்திரம் உறவினர்களுக்கு கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கைதிகளை பார்வையிடுவத்கு வருகைதருபவர்கள் உடைகளை மாத்திரமே கொண்டுவருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு அமைய உணவு மற்றும் பிற பொருட்களை சிறைச்சாலை சிற்றுண்டிச்சாலையின் மூலம் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக கைதிகளை பார்வையிடுவதற்கு தடை விதிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்கள்ம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் இரண்டு தினங்களுக்கு விசேட போக்குவரத்து திட்டம் அமுல்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மற்றும் நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட வழிபாட்டு நிகழ்வினை முன்னிட்டு குறித்த பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு அதிக அளவிலான...

உத்தேச மாகாண சபை தேர்தல் முறைமைகளில், மலையகத்திற்கு பாதிப்பு – பிரதமரிடம் செந்தில் விளக்கம்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள இரு வழிமுறைகளுக்கும், மலையக பிரதிகளின் எண்ணிக்கை குறைவடையும் என்பதை தாம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் அனைத்துக்...

மன்மோகன் சிங் இற்கும் கொரோனா

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலுக்கான சிறிய அறிகுறிகளுடன் இருந்த நிலையிலேயே, அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தில்...

பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி மீள  திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு கர்தினால் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கத்தோலிக்க திருச்சபையால் நிர்வகிக்கப்படும் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள்...

Developed by: SEOGlitz