குருந்தூர்மலை புராதான இடத்தில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச நாடுகளிடம் அனுமதி பெறவேண்டிய தேவைக்கிடையாது என தொல்பொருள் திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரி அநுரமானதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகசந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன நாடு என்ற ரீதியில் இந்த அகழ்வாய்வு குறித்து இலங்கைக்கு சுயாதீன தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த இய்வுகளை முன்னெடுக்கும் போது ஏற்பட கூடிய சவால்களை அவசியமற்ற ஒன்றாகவே கருதவேண்டியுள்ளதாகவும் அநுரமானதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், குருந்தூர்மலை பகுதியில் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி முதல் முன்னெடுக்கபட்டுவரும் அகழ்வு நடவடிக்கைகளில் தூபி ஒன்றின் எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்ட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னேச்சரம், நல்லுர் போன்ற வணக்கஸ்தளங்களை போன்று குருந்தூர்மலையை பார்க்காது, அதனை தொழ்லியல் ரீதியான இடமாக பார்க்கவேண்டுமெனவும் தொல்பொருள் திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரி அநுரமானதுங்க தெரிவித்துள்ளார்.