விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பிலான நடவடிக்கையினை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தவிர்த்துகொள்ளுமாறு நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமது நாடாளுமன்ற ஆசனம் இழக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, ரஞ்சன் ராமநாயக்கவினால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த ரிட் மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான Arjuna Obeysekera மற்றும் Mayadunne Corea ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த ரிட் மனு எதிர்வரும் 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.