மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்கள் மூவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக, அவர்களின் உறவினர்களினால், மன்னார் பொலிஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மீனவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த 3 மீனவர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 அளவில் படகு ஒன்றில் தொழிலுக்குச் சென்ற நிலையிலேயே இவ்வாறு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த மீனவர்களை தேடும்பணிகளை கடற்படையினர் முன்னெடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.