மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சித்த தொழிலாளர் தேசிய சங்கம்!

- Advertisement -

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பது கேலிக்கூத்தானது என, தொழிலாளர் தேசிய சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்த்தின் பங்காளியாக செயற்பட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான தீர்மானங்களை மேற்கொள்வது வேடிக்கையாக உள்ளதாக,  தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் கல்யாணகுமார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி, எதிர்வரும் 05 ஆம் திகதி அடையாள  வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதற்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்டத் துறைக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் நேற்றைய தினம் அழைப்பு விடுத்திருந்தார்

இந்த நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் குறித்த தீர்மானம் தொடர்பில், தொழிலாளர் தேசிய சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கல்யாணகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுதருவதாக கூறியே வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார்.

மேலும்,  கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள கூட்டுத்தொழிற்சங்கங்களையும்  இணைத்து, ஏன் கூட்டாக அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்புகின்றார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தன்னிச்சையாக அடையாள போராட்டத்திக்கு அழைப்பு விடுத்துள்ளமையானது, தமது தனிப்பாட்ட பலத்தை காண்பிக்க முற்படும் செயற்பாடா என சந்தேகம் எழுவதாக,  தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் கல்யாணகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாலைதீவில் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பில் விசாரணை!

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று  மாலைதீவில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சம்பவத்தில் குறித்த விமானம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக   ஶ்ரீலங்கன்  எயார்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது. மாலே சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  ஶ்ரீலங்கன்...

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம்!

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய பகுதியில்   கொரோனா  வைரஸ் பரவல்  மூன்றாம்  அலை   ஏற்படும் அபாயம் காணப்படுவதாக   பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. திவுலுப்பட்டிய பகுதியில் கடந்த 48 மணித்தியாலங்களில்  84 பேருக்கு கொரோனா தொற்று...

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் கொடிகாம் பகுதியில்  பொலிஸ் சமிக்ஞையை மீறி பயணித்த   வாகனம் ஒன்றின் மீது பொலிஸார்  துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளனர் சட்டவிரோத மணல்  கடத்தல் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு  கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...

பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் தீர்மானம் எதிர்வரும் இரண்டுவாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார் இதேவேளை நாட்டின் அனைத்து  பல்கலைக்கழகங்களும்...

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ஆரம்பிக்கப்படவிருந்த விமான சேவை ஒத்திவைப்பு

இலங்கை மற்றும்  இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில்  உயிர்குமிழி முறையிலான பயணமுறைமை இடைநிறுத்தப்படவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார், இருநாடுகளினதும் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்., இந்த நிலையில்...

Developed by: SEOGlitz