நாட்டின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுதந்திர தின கொண்டாட்டங்களை தங்களது வீடுகளில் இருந்தவாறு கொண்டாடுமாறு பாதுகாப்பு செயலாளர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் தேசிய கொடிகளை ஏற்றுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் 73 ஆவது சுதந்திரம் செழிப்பான நாளை வளமான தாய்நாடு எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.