நாடளாவிய ரீதியில் தற்போது 1 இலட்சத்து 22 ஆயிரம் பேர் வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள சிலர் சுகாதார விதிமுறைகளை மீறி வெளியில் நடமாடுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், அவர்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் வௌியேறுதல் அல்லது வெளிநபர்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு அழைத்து வருதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பவுமென பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மேல் மாகாணத்தில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்