- Advertisement -
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகக் கவசங்களை அணியாமை மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றி செயற்படாத நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
- Advertisement -
இந்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், இரண்டாயிரத்து 792 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.