மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 284 பேர் நாட்டுக்கு வருகை!

- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 284 இலங்கையர்கள்  நாட்டை வந்தடைந்துள்ளனர்.

குறித்த இலங்கையர்கள்  இன்று  முற்பகல் 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேரத்தில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement -

பெரும்பாலும் தொழில் நிமித்தம்  மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்தவர்கள் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளனர்.

இதன்படி டுபாயில் இருந்து 138 பேரும் கட்டாரில் இருந்து 114 பேரும் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளனர்.

குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு சுற்றுலா ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த காலப்பகுதியில்  சுமார் 400 இலங்கையர்கள் பல்வேறு தேவைகளின் நிமித்தம்  சிங்கப்பூர் மாலைதீவு இந்தியா  உட்பட மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடசாலைகளில் முறையான சுகாதார பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு

பெப்ரவரி மாதம்  மேல் மாகாணத்தின் அனைத்து  பாடசாலைகளும்  மீளதிறக்கப்படுவதற்கு முன்பதாக  கடுமையான சுகாதார பாதுகாப்பு திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள...

நாட்டின் பல பகுதிகளிலும் 18 பேர் கைது -காரணம் இதோ!

மேல்மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை...

பசறையில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று

பசறை பிரதேசத்தில்  பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி  கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளங் காணப்பட்டனர். இதனையடுத்து குறித்த இரு மாணவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி...

கண் வைத்தியசாலையில் 6  பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின்  பணியாளர்கள் 6  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாதியர்கள் இருவர், அலுவலக பணியாளர்கள் இருவர், பாதுகாப்பு அதிகாரி  மற்றும் வைத்தியசாலை சமையலறையின் உணவு தயாரிப்பாளர் என 6 பேர்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட 103 நிறுவனங்கள்!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 103  நிறுவனங்கள்  அடையாளங் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில்  அரச மற்றும் தனியார் துறையினை  உள்ளடக்கியவகையில்  910 நிறுவனங்களில்  நேற்று  மேற்கொள்ளப்பட்ட  விசேட சோதனை நடவடிக்கையில்...

Developed by: SEOGlitz