மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

- Advertisement -

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருகை தரும் பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறினால் அவர்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாட்டின் விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

- Advertisement -

சுற்றுலாப் பயணிகள், பயண நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ஆகியோருக்கு இந்த நடைமுறை பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உள்வருகை முதல் வெளிச் செல்லும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறினால், சுற்றுலாத்துறையின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்படும் என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், சுற்றுலா குழுக்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கு முன்னதாக, பயண நிறுவனங்களினால் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து அனுமதி பெறப்படுவது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சுற்றுலா பயணிகளை கண்காணிக்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் 24 மணிநேர கண்காணிப்பு மத்திய நிலையமொன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றினால் ஏற்றுக் கொள்ளப்படாத நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தர அனுமதி வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சில அரச நிறுவனங்களுக்கு கோப் குழுவினால் அழைப்பு!

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, தென்னை பயிர்ச்செய்கை சபை மற்றும் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டன. நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை Zoom...

பிரான்ஸில் மீண்டும் தேசிய முடக்க செயற்பாடுகளை அமுல்..!

கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக பிரான்ஸில் மீண்டும் தேசிய முடக்க செயற்பாடுகளை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸின் மருத்துவ ஆலோசகர் குழுவினர்  இதனை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸில் கடந்தவாரம்...

குறைந்த ஓட்டங்களுக்கு விக்கெட்டுக்களை பறிக்கொடுத்தது இலங்கை..!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து...

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் பணிபுரிந்த அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் பணிபுரிந்த 13 அதிகாரிகளும் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...

லைபீரிய கப்பலினால் சுற்றாடலுக்கு பாதிப்பு? சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை!

திருகோணமலை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான லைபீரிய கப்பலினால்  சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமாயின் குறித்த கப்பல் நிறுவனத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை  தெரிவித்துள்ளது. இதேவேளை திருகோணமலை நோக்கி பயணித்த...

Developed by: SEOGlitz