மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்படுமா?- தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்

- Advertisement -

மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனை கூறியுள்ளார்.

- Advertisement -

அத்துடன், தற்போது காணப்படும் மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகளுடன் செயற்படுவது அவசியமாகும் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேர்தல் நாளில் வாக்களிக்க முடியாத தரப்பினருக்கு, குறிப்பிட்ட தேர்தல் வாக்கெடுப்பு தினத்துக்கு முன்னதாகவே வாக்களிக்கும் வகையில் அனுமதி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஊடகவியலாளர்கள் மற்றும் சுகாதார தரப்பினர் ஆகியோர் உள்ளிட்ட தரப்பினருக்கு வாய்ப்பு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், புலம்பெயர்ந்தவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்க அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.

தேர்தல்கள் சட்டத்தை திருத்துவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவினால் குறித்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தேசிய ரீதியில் பதிவு செய்யப்பட்ட சில கட்சிகளின் செயற்பாடுகள், குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, அவ்வாறான கட்சிகளை குறிப்பிட்ட மாகாணங்களுக்காக மாத்திரம் பதிவு செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடசாலைகளில் முறையான சுகாதார பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு

பெப்ரவரி மாதம்  மேல் மாகாணத்தின் அனைத்து  பாடசாலைகளும்  மீளதிறக்கப்படுவதற்கு முன்பதாக  கடுமையான சுகாதார பாதுகாப்பு திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள...

நாட்டின் பல பகுதிகளிலும் 18 பேர் கைது -காரணம் இதோ!

மேல்மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில்  தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை...

பசறையில் பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று

பசறை பிரதேசத்தில்  பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பாடசாலையில் கடந்த 18 ஆம் திகதி  கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளங் காணப்பட்டனர். இதனையடுத்து குறித்த இரு மாணவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி...

கண் வைத்தியசாலையில் 6  பேருக்கு கொரோனா தொற்று

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின்  பணியாளர்கள் 6  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தாதியர்கள் இருவர், அலுவலக பணியாளர்கள் இருவர், பாதுகாப்பு அதிகாரி  மற்றும் வைத்தியசாலை சமையலறையின் உணவு தயாரிப்பாளர் என 6 பேர்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட 103 நிறுவனங்கள்!

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட  மேலும் 103  நிறுவனங்கள்  அடையாளங் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில்  அரச மற்றும் தனியார் துறையினை  உள்ளடக்கியவகையில்  910 நிறுவனங்களில்  நேற்று  மேற்கொள்ளப்பட்ட  விசேட சோதனை நடவடிக்கையில்...

Developed by: SEOGlitz