மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

- Advertisement -

இலங்கைக்கு பயணிக்க விரும்பும் எந்தவொரு உள்நாட்டு அல்லது வௌிநாட்டு பயணியும் முன் அனுமதி பெறுவது அவசியம் என சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சு, இலங்கைத் தூதரகம் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்கள் ஆகியவற்றில் இதற்கான முன் அனுமதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த பிரிவினரின் அனுமதி கிடைக்கப் பெற்ற பின்னர், அது குறித்த விபரங்கள், சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபைக்கு அனுப்பப்படுவது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விமானப் பயணச் சீட்டுகளை வழங்குதல் மற்றும் சம்பந்தப்பட்ட விமான சேவை நிறுவனங்களுக்கான தகவல்களை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் இதன் பின்னர் முன்னெடுக்கப்படும் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பான மின்னஞ்சல்களை, [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழில் பொதுச் சந்தைகளுக்கு சுகாதாரத் தரப்பினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பொதுச்சந்தைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த 15 ஆம் திகதி வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு வழிகாட்டல்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 27 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்...

வவுனியாவில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

வவுனியா பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து சுகாதார பிரிவினரினால்...

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று விசேட கூட்டம்!

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 9.30 அளவில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19 ஆம்...

இந்திய – அவுஸ்திரேலிய டெஸ்ட் : நான்காம் நாள் ஆட்டம்..

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர்...

Developed by: SEOGlitz