மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்புடைய 10 பேருக்கு PCR பரிசோதனை!

- Advertisement -

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 10 பேர் பி சி ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த 5 ஆம் திகதி அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தமது 82 ஆவது பிறந்ததின கொண்டாட்ட நிகழ்வுகள் நீர் வழங்கல் அமைச்சில் இடம்பெற்றுள்ளன.

- Advertisement -

இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை ரெப்பிட் என்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ் எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வுப்ஹக்கீமுடன் தொடர்புடையவர்களாக   நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 17 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தொடர்புடையவர்களுள் ஒருவராக குறிப்பிடப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தமக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை பி சி ஆர் பரிசோதனையூடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியேல்லவிடம் மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் தொடர்புடையவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ரவூப்ஹக்கீம் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருடன் தொடர்புடைய 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா…!

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க...

கைவிடப்பட்ட நுவரெலிய போராட்டம்….!

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில்,  நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம்...

சொகுசு பேருந்து செயற்றிட்டம் வெற்றி : இலங்கை போக்குவரத்து சபை!

Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டத்தின்...

நாடாளுமன்ற அமர்வுகளுக்கு கட்டுப்பாடு : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 20  மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நாட்டில் நேற்றைய நாளில் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங்...

Developed by: SEOGlitz