மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொதுமக்களிடம் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை..!

- Advertisement -

நாட்டின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் அடுத்த 6 மாதங்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை கூறியுள்ளார்.

- Advertisement -

அத்துடன், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், தமது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த வருடத்தைப் போலவே, இந்த வருடமும் கொரோனா தொற்றை வெற்றி கொள்வதற்கு பொதுமக்களின் அர்ப்பணிப்பு அவசியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மற்றும் முப்படையினர் உட்பட முழு நாட்டு மக்களும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாளைய தினத்திற்குள் கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் சாத்தியம் – சுகாதார அமைச்சு

நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்ததும், அதனை உடனடியாக வழங்குவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி!

தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. பாகிஸ்தான் - கராச்சியில் இடம்பெறும் இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இதன்படி, தமது...

நாளை முதல் FACEBOOK வழங்கவுள்ள புதிய வசதி – இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையில் சுமார் 6 தசம் 5 மில்லியன் FACEBOOK பயனாளர்கள் காணப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல்...

நாட்டின் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 369 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 709...

பிட்டபெத்தர பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தொற்றுக்குள்ளான சிலர் அடையாளம்!

மாத்தறை மாவட்டத்தில் - பிட்டபெத்தர பகுதியிலுள்ள முதியோர் இல்லம் ஒன்றில் கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மொரவக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 12 முதியோர்களுக்கும், முதியோர் இல்லத்தில்...

Developed by: SEOGlitz