மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீரற்ற வானிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம்!

- Advertisement -

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக,12 ஆயிரத்து 255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கிழக்கு மாகாணத்திலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் 2 ஆயிரத்து 839 குடும்பங்களை சேர்ந்த, 9 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில். கிழக்கு மாகாணத்திற்கு உட்பட்ட திருகோணமலை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். அவர்களில் நான்காயிரத்து 482 பேர் குச்சவெளிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஆயிரத்து 477 பேர் காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்கூரப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு,  மத்திய , வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின்  சில இடங்களில் இவ்வாறு 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் மேலும் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர்  வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்றும் மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் அதிகரிக்கும் அச்சநிலை – 873 பேருக்கு கொரோனா – உயிரிழப்பும் அதிகரிப்பு…!

நாட்டில் கொரொனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றையதினம் 873 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்ட நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது, பேலிய கொடை கொரோனா கொத்தணியுடன தொடர்புடைய 866 பேரும்,...

நுவரெலியா மாவட்டத்தில் 16 பாடசாலைகளுக்கு தேசிய பாடசாலை அந்தஸ்து!

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள 16 தமிழ்ப் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர்...

இந்தியாவிலிருந்து தடுப்பூசி கொள்வனவு செய்வதற்கான ஆவணங்கள் சட்டமா அதிபரிடம்!

இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசியைக் கொள்வனவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த கொள்வனவு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியான அனுமதியைப்...

தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – அதிகரிக்கும் தொற்றாளர்கள்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 337 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி குறிப்பிட்டுள்ளது. பேலியக்கொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 330 பேரும், கைதிகள் 7 பேரும் இவ்வாறு தொற்றுடன்...

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு எதிர்க்கட்சியினால் கோரிக்கை

மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்தநாட்டு எதிர்க்கட்சித் தலைவர் தத்துக் அன்வர் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார். நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம்...

Developed by: SEOGlitz