மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிள்ளையானை விடுதலை செய்த அரசாங்கம் தம்மை சிறைப்படுத்தியுள்ளது: ரஞ்சன் விமர்சனம்..!

- Advertisement -

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக, பல்லன்சேன சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறித்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிசிர டி அப்ரு, விஜித் மலல்கொட மற்றும் ப்ரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில்  சட்டமா அதிபரினால் தொடரப்பட்டுள்ள குறித்த வழக்கில், ரஞ்சன் ராமநாயக்க குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, நீதியரசர் சிசிர டி அப்ரு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையிலேயே, மூன்று பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால், நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி, அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில்  ரஞ்சன் ராமநாயக்க கருத்தொன்றை வெளியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, ஓய்வுபெற்ற சிரேஷ்ட விமானப் படை அதிகாரி சுனில் பெரேராவினால், உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது

இந்தப் பின்னணயில், குறித்த முறைப்பாட்டை அடிப்படையாக கொண்டு, ரஞ்சன் ராமநாயக்கவை பிரதிவாதியாக குறிப்பிட்டு, சட்டமா அதிபரினால் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையிலேயே, குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது.

இதேவேளை, பிள்ளையானை விடுதலை செய்த அரசாங்கம் தம்மை சிறைப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்,.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்,

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக அவரது நாடாளுமன்ற உறுப்புரிமை இழக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று இந்த தகவலை வௌியிட்டுள்ளது.

எனினும், கட்சி என்ற ரீதியில் புதிய நாடாளுமன்ற உறுப்பினரை பெயரிட வேண்டிய அவசியம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தலில் போட்டியிட்டு ரஞ்சன் ராமநாயக்கவுக்கு அடுத்ததாக, வாக்குகளைப் பெற்றுள்ள அஜித் மான்னப்பெரும நியமிக்கப்படுவார் எனவும், அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அஜித் மான்னப்பெருமவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் பெயரிடப்படும் எனவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கைவிடப்பட்ட நுவரெலிய போராட்டம்….!

நுவரெலியா - கந்தப்பளை - பார்க் தோட்டத்தில்,  நேற்றிரவு முதல் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. பார்க் தோட்ட முகாமையாளரை இடமாற்றம் செய்வதற்கு, குறித்த பெருந்தோட்ட கம்பனி இணக்கியதை அடுத்து, தாம்...

சொகுசு பேருந்து செயற்றிட்டம் வெற்றி : இலங்கை போக்குவரத்து சபை!

Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், Park & Ride சொகுசு பேருந்து செயற்றிட்டத்தின்...

நாடாளுமன்ற அமர்வுகளுக்கு கட்டுப்பாடு : கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

நாடாளுமன்ற அமர்வுகளை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த...

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 20  மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். நாட்டில் நேற்றைய நாளில் 763 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில்  கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளங்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஏனைய இருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முகத்துவாரம் மீன்பிடி துறைமுகம் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு விலை மனு...

Developed by: SEOGlitz