மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நினைவுத் தூபி விவகாரம்: சுசில் பிரேமஜயந்த கருத்து!

- Advertisement -

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ள நினைவுத் தூபி சட்ட விரோதமானதாக அமையாது என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

- Advertisement -

அங்கு அப்படியொரு தூபி இருந்ததாக எனக்கு அன்றுவரை தெரியாதிருந்தது. ஆனால் அந்த தூபி இடிக்கப்பட்ட பின்னர் அதுபற்றி தெரியாத பலரும் அங்கு தூபி இருந்ததை இன்று அறிந்துகொண்டார்கள். எனினும், உப வேந்தரின் தலையீட்டில் அங்கு அடிக்கல் மீண்டும் நடப்பட்டதால் அது சட்டவிரோதமானதாக அமையாது. பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் இன்று புதிய தூபி அமைக்கப்படுகின்றது. அந்த இடத்தில் பிரச்சினை இன்று தீர்க்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே இருந்த தூபி சிலரை நினைவுகூர்வதற்காக அமைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாத்திரமல்ல, நாட்டின் ஏனைய பல பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களால் பலவற்றையும் நினைவுபடுத்துவதற்காக இவ்வாறான விடயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தின் அனுமதியின்றியே பழைய தூபி அமைக்கப்பட்டிருந்தது. எனினும் உப வேந்தரின் தலையீட்டில் புதிய தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதால், அமைக்கப்படவுள்ள நினைவுத்தூபியானது அனைவருக்கும் பொதுவானதாக அமையும்.

இதேவேளை, இந்த விடயம் பல்கலைக்கழகத்தின் சுயாதீனமான தீர்மானமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கவில்லை. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கான சட்டமொன்று உள்ளது. உப வேந்தர்களின் நியமனங்களும் அதன் கீழேயே இடம்பெறுகின்றன. செனட் சபையின் ஊடாகவே பல்கலைக்கழக நிர்வாகங்களும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் உப வேந்தரின் தலையீட்டில் தூபிக்கான அடிக்கல் நடப்பட்டுள்ளதால், அது பல்கலைக்கழக நிர்வாகத்தினால் எடுக்கப்பட்ட சுயாதீன தீர்மானமாகும். இதனை சட்டரீதியானது என்பதை விட முறைப்படி இடம்பெற்ற நடவடிக்கை என்று கூற முடியும்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மேல்மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படும் சாத்தியம்? : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

மேல்  மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்று மாணவர்களுக்காக 907 பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்ப்ட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று!

இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. சர்வதேச உறவுகள் இராஜாங்க அமைச்சரான தாரக பாலசூரியவின் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் கொரோனா  தொற்றுக்குள்ளான நபர்...

ஸ்பெயினில் பாரிய வெடிப்புச் சம்பவம் : இருவர் உயிரிழப்பு!

ஸ்பெயினின் மாட்றிட் நகரில் ஏற்பட்ட பாரிய வெடிப்புச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எரிவாயு கசிவால் ஏற்பட்ட குறித்த வெடிப்புச் சம்பவத்தால் பல கட்டடங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த வெடிப்புச் சம்பவத்தினையடுத்து...

நெடுந்தீவில் விபத்திற்குள்ளான இந்திய மீனவர்கள் சடலமாக மீட்பு!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவப் படகு நெடுந்தீவு கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்த மீனவர்கள் இருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளன. கடற்படையினரால் இன்று மாலை இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார்...

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு : ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 389 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 55 ஆயிரத்து 187 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 53 வயதான...

Developed by: SEOGlitz