மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா மாவட்டத்தின் சில பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம்!

- Advertisement -

வவுனியா நகரினை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில், வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 42 பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியாவில் 2 ஆயிரம் பேருக்கு முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வரும் வரை குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்று முறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்து அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செட்டிகுளம் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட 2  பாடசாலைகளினதும் கல்விசெயற்பாடுகளை வருகைதரும் ஆசிரியர்களை கொண்டு நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...

தொடரின் திருப்பு முனையாக அமையப்போகும் இன்றைய போட்டி…!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில்...

நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் மேலும் அதிகரிப்பு -விபரம் உள்ளே!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 77 வயதான...

கொரோனா தொற்று மீண்டும் சடுதியாக அதிகரிப்பு -விபரம் இதோ!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 492 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி,...

இலங்கை எதிர் இங்கிலாந்து: மூன்றாம் நாள் ஆட்ட விவரம் இதோ!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய நாள் ஆட்ட நேர...

Developed by: SEOGlitz