இலங்கை நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர்நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் அது தொடர்பில் சுகதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி உரிய ஆலோசனைகளை பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்நத சகல இடங்களையும் கிருமி நீக்கத்துக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் கூறினார்.
நாடாளுமன்ற பணியாளர்கள் எழுமாறாக பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற வளாகத்திலேயே பிசிஆர் பரிசோதனையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்,
இந்த நிலையில நாடாளுமன்ற அடுத்த அமர்வுகளின் செயற்பாடுகள் குறித்து தீர்மானிக்கும் நோக்கில் நாளை மறுதினம் பிற்பகல் 02 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.