பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் நாளை முதல் திறக்கப்படவுள்ளது.
எனினும், மொத்த வியாபாரிகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, மாற்று இடமொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும், நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியலாய மைதானத்தில் வழங்கப்பட்ட குறித்த இடத்தில் வர்த்தகத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
அத்துடன், வவுனியா கண்டி வீதியில் 291 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் பயன்படுத்தப்படாமல் உள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.
இதன் காரணமாக, குறித்த பொருளாதார மத்திய நிலையத்தில், மரக்கறி மொத்த கொள்வனவு மற்றும் விற்பனை நடவடிக்கைகளை நாளை முதல் முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது