கொரோனா தொற்றை அடிப்படையாக கொண்டு, எதிர்க் கட்சியினர் தமக்கான வாய்ப்புக்களை உருவாக்க முயற்சிப்பதாக, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவிக்கின்றார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்க் கட்சியினர் தற்போது பல்வேறு யோசனைகளையும், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றது. சிலவேளைகளில் தடுப்பூசிகளை கொண்டுவருமாறு கோருவார்கள், இன்னும் சில நேரங்களில் அவற்றைக் கொண்டுவர வேண்டாம் என கூறுகின்றார்கள். விமான நிலையங்களை திறக்குமாறு சில நேரங்களில் கூறிவிட்டு, அவற்றை திறக்கும் போது திறக்க வேண்டாம் என தெரிவிக்கின்றார்கள். அத்துடன் சுற்றுலாத் துறையினர் நிர்க்கதிக்குள்ளாகி பட்டினியில் இருப்பதான மறுபுறத்தில் குறிப்பிடுகின்றார்கள். இதற்குத் தீர்வாக சுற்றுலாப் பயணிகளை அழைத்துவர ஏதேனும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், கொரோனாவை நாட்டுக்கு கொண்டுவருவதாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள்.நாட்டை மூடி வைப்பதே எதிர்க்கட்சிக்கு தேவையாகியுள்ளது.நாட்டை முடக்கினால் பிரச்சினைகளை உருவாக்கி அதன் ஊடாக அரசியல் இலாபங்களைப் பெற முயற்சின்றார்கள்.