மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலைகளை மீளத் திறக்க மேற்கொண்டுள்ள முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை!

- Advertisement -

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை மீளத் திறக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு, ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், அனைத்து பாடசாலைகளையும் ஒரே நேரத்தில் மீளத் திறப்பது பாரிய ஆபத்துக்கு வழிவகுக்கும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் தவறியுள்தாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கொரோனா தொற்று பரவல் தொடர்பில் பெற்றோர்களின் மத்தியில் காணப்படும் அச்ச நிலைமை குறித்தும் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், பாடசாலைகளை மீள திறப்பதன் மூலம், நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அரசாங்கம் சித்தரிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான முடிவுகளை அரசாங்கம் தன்னிச்சையாக மேற்கொள்ளக்கூடாது எனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக, பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீளத் திறப்பதே பொருத்தமான நடவடிக்கையாக அமையும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஓஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ள சூரரைப் போற்று…?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது. இதன்படி, சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற ‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஏர் டெக்கான்...

நாளைய தினத்திற்குள் கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கும் சாத்தியம் – சுகாதார அமைச்சு

நாட்டுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்ததும், அதனை உடனடியாக வழங்குவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்க – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி!

தென்னாபிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. பாகிஸ்தான் -கராச்சியில் இடம்பெறும் இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் அணி, இன்றைய...

நாளை முதல் FACEBOOK வழங்கவுள்ள புதிய வசதி – இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

இலங்கையில் சுமார் 6 தசம் 5 மில்லியன் FACEBOOK பயனாளர்கள் காணப்படுவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல்...

நாட்டின் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 369 பேர் இன்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 709...

Developed by: SEOGlitz