இலங்கைக்கான பங்களாதேஷின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்ற தாரிக் மொஹமட் அரிபுல் இஸ்லாம் இன்று ஜனாதிபதியிடம் தமது நியமனக் கடிதத்தை கையளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை அவர் தமது நியமனக் கடிதத்தை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதன் போது கொரோனா தொற்று நிலைமையினால் நாடு எதிர்நோக்கியுள்ள நிலைமை குறித்து ஜனாதிபதி தௌிவுபடுத்தியதுடன் பங்களாதேஷ் உள்ளிட்ட தமது பிராந்திய நாடுகளுடன் அடையாளளம் காணப்பட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள நாடு என்ற வகையில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு தமது நாடு அதிக முக்கியத்துவமளித்துள்ளதாகவும் உயகல்வி.விவசாயம், ஏற்றுமதி பயிர்கள் சுற்றுலாத்தறை மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்த முடியும் எனவும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.
அத்துடன் தமது நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும் இதன் போது பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.