தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி உறுப்பினர் சமித் விஜேசுந்தர தெரிவிக்கின்றார்.
எதிர்க் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதியொருவர் கதைக்கும் போது, நாட்டு மக்கள் மற்றும் சர்வதே மக்கள் என அனைவரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, பிராபகனை நந்திக்கடலில் இருந்து நாயைப் போன்று இழுத்துவந்தததாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.ஜனாதிபதி என்ற வகையில் அவ்வாறு கதைப்பது பொருத்தம் கிடையாது.ஆனால் ஜனாதிபதியாகுவதற்கு முன்னர், பிரபல ஹோட்டலொன்றில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, சரத்பொன்சேக்காவே யுத்தம் செய்தார் என குறிப்பிட்டிருந்தார்.யுத்தம் தொடர்பில் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் தற்போது மக்களுக்கு முன்பாக பொய் உரைக்கின்றார்.அத்துடன் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்த கருத்துக்கு கோபம் கொண்டிருந்தார்.இது ஜனாநாயக நாடாகும்.ஜனநாயக நாடொன்றில் ஜனாதிபதிக்கு ஆதரவான அல்லது எதிரான கருத்துக்களை முன்வைக்கவும் மக்களுக்கு சுதந்திரம் உள்ளது.அதனை ஜனாதிபதி தெரிந்து கொள்ள வேண்டும்